தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 61
அல்-பகரா வசனம் 612:61

وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ 

"மூஸாவே! ஒரே வகை உணவை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது; பூமி விளைவிக்கும் கீரை, வெள்ளரி, கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்கு வெளிப்படுத்தித் தரும்படி உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூறியபோது, அவர், "சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்கிறீர்களா? ஏதேனும் ஓர் ஊருக்கு இறங்கிச் செல்லுங்கள்; நீங்கள் கேட்டது அங்கு உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறினார். இழிவும் வறுமையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன; அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணம். மேலும் அவர்கள் மாறு செய்து, வரம்பு மீறி வந்ததும் இதற்குக் காரணம்.

அல்-பகரா 2:61 | தமிழ் குர்ஆன்