அல்-பகரா வசனம் 1972:197
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
ஹஜ் (காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அவற்றில் யார் ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக்கொள்கிறாரோ, ஹஜ்ஜின்போது பாலுறவு கொள்வதோ, பாவம் செய்வதோ, சண்டையிடுவதோ கூடாது. நீங்கள் செய்யும் எந்த நன்மையையும் அல்லாஹ் அறிவான். (பயணத்திற்குத்) தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இறையச்சமே பயணத் தேவைகளில் சிறந்ததாகும். அறிவுடையவர்களே! எனக்கே அஞ்சுங்கள்.