தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 196
அல்-பகரா வசனம் 1962:196

وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ 

ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால், பலிப்பிராணிகளில் இயன்றதை (அறுங்கள்). பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை மழிக்காதீர்கள். உங்களில் யாரேனும் நோயாளியாகவோ, தலையில் தொந்தரவு உடையவராகவோ இருந்து (தலையை மழிக்க நேர்ந்தால்), நோன்பு, தர்மம், பலியிடுதல் ஆகியவற்றில் ஒன்றைப் பரிகாரமாகச் செய்ய வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால், உம்ராவை முடித்துவிட்டு ஹஜ் வரை அதன் சலுகையை அனுபவிப்பவர் பலிப்பிராணிகளில் இயன்றதை (அறுக்க வேண்டும்). அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும், நீங்கள் திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்; இவை முழுமையான பத்து நாட்கள். இது புனிதப் பள்ளிவாசலின் அருகே குடும்பம் வசிக்காதவருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.