شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
ரமழான் மாதத்தில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது; அது மக்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான சான்றுகளாகவும், நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கும் அளவுகோலாகவும் உள்ளது. ஆகவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர், மற்ற நாட்களில் அந்த எண்ணிக்கையை (நோற்க வேண்டும்). அல்லாஹ் உங்களுக்கு எளிமையையே நாடுகிறான்; உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு விதித்தான்).