அல்-பகரா வசனம் 1732:173
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக (அறுக்கும்போது பெயர்) கூறப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆனால் விரும்பாமலும், வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டவர் மீது எந்தப் பாவமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.