அல்-பகரா வசனம் 1652:165
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ
அல்லாஹ்வையன்றி இணைகளை ஏற்படுத்திக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல் அவற்றை நேசிப்பவர்களும் மக்களில் உள்ளனர். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிகவும் உறுதியானவர்கள். அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும்போது, எல்லா வல்லமையும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் அறிந்துகொள்வார்கள்; அதை அவர்கள் முன்பே அறிந்திருந்தால்!