وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ
இவ்வாறே, நீங்கள் மக்களுக்குச் சாட்சிகளாக இருப்பதற்காகவும், தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். புறமுதுகிட்டுத் திரும்பிச் செல்பவரிடமிருந்து தூதரைப் பின்பற்றுபவரை நாம் பிரித்தறிவதற்காகவே நீர் இதுவரை நோக்கி வந்த கிப்லாவை ஏற்படுத்தி இருந்தோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களுக்குத் தவிர, அது நிச்சயமாகப் பெரும் சுமையாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குபவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக்க இரக்கமுடையவன், பெருங்கருணையாளன்.