அல்-பகரா வசனம் 1262:126
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
"என் இறைவா! இதைப் பாதுகாப்பான நகரமாக ஆக்குவாயாக; இதில் வசிப்பவர்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவர்களுக்குக் கனிகளிலிருந்து உணவளிப்பாயாக" என்று இப்ராஹீம் கூறியபோது, "நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் சுகம் அனுபவிக்கக் கொடுப்பேன்; பின்னர் அவனை நெருப்பின் வேதனையின் பக்கம் நிர்ப்பந்திப்பேன். அது சேருமிடங்களில் மிகவும் கெட்டது" என்று அவன் கூறினான்.