وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
ஸுலைமானின் ஆட்சியைப் பற்றி ஷைத்தான்கள் ஓதியவற்றையே அவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை; ஷைத்தான்களே நிராகரித்து, மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டதையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவரும், "நாங்கள் ஒரு சோதனையே; ஆகவே நிராகரித்துவிடாதே" என்று கூறாமல் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிவினை உண்டாக்கும் வழியை அவர்கள் அவ்விருவரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் அனுமதியின்றி அதன் மூலம் அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய முடியாது. தங்களுக்குப் பயன் தராமல் தீங்கு செய்வதையே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அதை விலைக்கு வாங்கியவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது; இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!