كَانَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِيَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ فِيمَا ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَمَا ٱخۡتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَا ٱخۡتَلَفُواْ فِيهِ مِنَ ٱلۡحَقِّ بِإِذۡنِهِۦۗ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٍ
மக்கள் ஒரே சமுதாயமாக இருந்தார்கள். பின்னர் அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பினான். மக்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக, அவர்களுடன் வேதத்தை உண்மையுடன் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களிடம் வந்த பின்னரும், தங்களுக்கிடையே உள்ள பொறாமையால் அது கொடுக்கப்பட்டவர்களே அதில் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட உண்மையின் பக்கம், நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் தன் அனுமதியுடன் நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.