தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 187
அல்-பகரா வசனம் 1872:187

أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ 

நோன்பு நாளின் இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை. நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்துவந்தீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்தான்; ஆகவே உங்களை மன்னித்து, உங்களைப் பொறுத்தருளினான். எனவே இப்போது அவர்களுடன் கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடுங்கள். விடியலின் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் தங்கி வணங்கும் நிலையில் அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகள்; அவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்; அதனால் அவர்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்.

அல்-பகரா 2:187 | தமிழ் குர்ஆன்