தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 177
அல்-பகரா வசனம் 1772:177

۞ لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ 

உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையல்ல. மாறாக, அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பி, செல்வத்தின் மீது விருப்பம் இருந்தும் அதை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும் கொடுத்து, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுப்பவர்களும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்களும், வறுமையிலும், நோயிலும், போரின் போதும் பொறுமையாக இருப்பவர்களுமே நன்மை உடையவர்கள். அவர்களே உண்மையாளர்கள்; அவர்களே இறையச்சம் உடையவர்கள்.

அல்-பகரா 2:177 | தமிழ் குர்ஆன்